மின்வெட்டு அமுலாகுமா? தயார்படுத்தப்படும் அட்டவணை
srilanka
fuel
powercut
Gamini Lokuge
By Sumithiran
தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மின் தடை ஏற்பட்டால், அதற்கான அட்டவணையை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் தாங்கிக்கு டொலரை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இப்பணி வெற்றியடையும் பட்சத்தில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மின்சாரசபைக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு லங்கா ஐ ஓ சி நிறுவனத்திடம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்