புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி - கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
By Sumithiran
நடைபெற்று முடிந்து பெறுபேறுகள் வெளியாகிய 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் இம்முறை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் பரீட்சைஇடம்பெற்றது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி