பிரித்தானியாவில் கல்வி கற்க அரியவாய்ப்பு..! மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கல்வி உதவித்தொகை
பிரித்தானியாவின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (UEA) வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (University of East Anglia (UEA)), வெளிநாட்டு மாணவர்களுக்காக பல்வேறு கல்வித் துறைகளில் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை வாய்ப்பு 2024-2025 கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளைத் தொடங்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வித் திட்டங்கள்
இதன் மூலம், திறமையான வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் கல்வியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், மானிடவியல், பொறியியல், அறிவியல், கலைகள், சட்டம் மற்றும் பல துறைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
£4,000 பவுண்டுகள் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது, குறிப்பாக இது வெளிநாட்டு முதுநிலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கல்வி உதவித்தொகை திட்டத்தின் நுழைவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தானாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நிதி உதவி
இந்த கல்வி உதவித்தொகையானது சாதனை படைத்த வெளிநாட்டு இளநிலை மாணவர்களை அங்கீகரித்து பாராட்டுகிறது. மேலும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் முழுநேர இளநிலை பட்டப்படிப்பு திட்டத்தின் முதல் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் £4,000 பவுண்டுகள் குறைப்பு அளிக்கிறது.
இந்த போட்டித்திறன் மிக்க கல்வி உதவித்தொகை அனைத்து தகுதிவாய்ந்த சர்வதேச இளநிலை விண்ணப்பதாரர்களுக்கும், வழங்கப்படுகிறது. கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு நிதி உதவியும் வழங்குகிறது.
இந்த முழு கல்வி உதவித்தொகை வெளிநாட்டு எழுத்தாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது £28,500 பவுண்டுகள் மதிப்புடைய மற்றும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் இலக்கியம், நாடகம் மற்றும் படைப்பாக்க எழுத்து துறையில் முதுகலை பட்டப்படிப்பிற்கு முழுவதுமாக நிதியளிப்பதாகவும் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |