பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு : கோடிக்கணக்கில் சம்பளம்...!
பிரித்தானியாவில் வைத்தியர் தொழிலுக்காக வருவோருக்கு ஆண்டுக்கு 150 ஆயிரம் பவுண்ஸ் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான யூஸ்ட் மற்றும் பென்பெகுலா ஆகிய தீவுகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பாரியதொரு தொகையை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், குறித்த தீவுகளுக்கு அதிகளவான வைத்தியர்கள் தொழில்வாய்ப்பு தேடி செல்வார்கள் என நம்பப்படுகிறது.
வைத்தியர் பற்றாக்குறை
ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமான யூஸ்ட் மற்றும் பென்பெகுலா ஆகிய தீவுகளில் தற்போது கடும் வைத்தியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால், பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS, அந்த தீவுகளுக்கு பணிக்குச் செல்லும் வைத்தியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 150 ஆயிரம் பவுண்டுகள் சம்பளம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடக், குறித்த தீவுகளில் பணி புரியும் மருத்துவர்களுக்கு, வாரத்துக்கு 40 மணி நேர வேலை, மேலதிக கொடுப்பனவு, 41 நாட்கள் விடுமுறை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை
இதேவேளை, ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமான ரம் எனும் தீவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆயிரம் மக்கள் வாழும் இந்த தீவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், குறித்த பகுதியில் உள்ள மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரம் தீவில் ஆசிரியர் தொழிலுக்காக வருவோருக்கு சுமார் 68 ஆயிரம் பவுண்ஸ் சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |