மயங்கிவிழுந்த பள்ளிப் பேருந்து சாரதி - பல உயிர்களை காப்பாற்றிய சிறுவன்!
United States of America
World
By Pakirathan
பள்ளிப் பேருந்தின் சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால், சிறுவன் ஒருவன் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால் பேருந்து கட்டுப்பாடின்றி பயணித்துள்ளதுடன், அதில் இருந்த பள்ளி சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
சிறுவனின் செயல்
டில்லன் ரீவ்ஸ் (Dillon Reeves) எனும் சிறுவன் உடனடியாக முன்னே வந்து பேருந்தை சரியான பாதைக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.
பின்னர் அவசர சேவைப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
66 பேரின் உயிரைக் காப்பற்றிய குறித்த சிறுவனை "ஹீரோ" எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி