ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் கருதி கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
"பாடசாலை சேவை"
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக "பாடசாலை சேவை" என்ற பெயரில் புதிய தனியார் பேருந்து சேவை ஓகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி முதல் "பாடசாலை சேவை" பேருந்துகளின் பெயர்ப் பலகையில் குறித்த பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தினமும் இரண்டு முறை இந்த புதிய பேருந்து சேவை இடம் பெற உள்ளது.
அசௌகரியமும் இன்றிய போக்குவரத்து
எனவே, ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த பேருந்து சேவைக்கு கட்டணம் செலுத்தி எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த போக்குவரத்து சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மாணவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி பாடசாலைக்கு செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
