பசியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் -அரசு மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
போஷாக்கான உணவு
பாடசாலை மாணவர்களுக்கு முறையான போஷாக்கை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில்,
பசியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்
இன்று பல மாணவர்கள் பசியுடன் பள்ளிக்கு வருகிறார்கள். பாடசாலை மாணவர்களின் போசாக்கு பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எத்தனையோ தகவல்களை தெரிவித்தாலும் அது தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிரச்சனை இருப்பதாக மருத்துவர்களும், பல சுகாதார நிறுவனங்களும் கூறும்போது, அப்படியொரு நிலை இல்லை என அரசு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.