காவல்துறையின் கண்ணீர்புகையால் பாடசாலை மாணவர்கள் கடும் பாதிப்பு
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் மேற்கொண்ட கண்ணீர் புகையை சுவாசித்ததில் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை கண்டித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது.
இன்றும் போராட்டம்

இன்றும் போராட்டக்காரர்கள் பாடசாலைகளால் சூழப்பட்ட கேம்பிரிட்ஜ் பிளேஸுக்குள் நுழைந்ததையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசினர்.
எனினும், கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் காவல்துறையினரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

பாடசாலை மாணவர்கள் இருமல் மற்றும் கடுமையான அசௌகரியத்தை எதிர் கொண்டதை அடுத்து அவர்கள் மீண்டும் அருகிலுள்ள பாடசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.