மாணவர்களை தாக்கிய அதிபர் பின்னர் நடந்த விபரீதம்(படங்கள்)
பாணந்துறை கேசல்வத்தை ஸ்ரீ ஜினாதர்மதான வித்தியாலயத்தின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணனி ஆய்வு கூடத்திற்கு இன்று (03) பிற்பகல் தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 12 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிபர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆத்திரமடைந்து அதிபரின் நாற்காலிக்கு தீ வைப்பது தொடர்பில் பேசியே இவ்வாறு செய்துள்ளதாக காவல்துறைறயினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் கணனி ஆய்வகத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட கணனிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல சம்பியன் கிண்ணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது பள்ளி மூடப்பட்டிருந்தது, மேலும் தீ பரவுவதைக் கண்ட குடியிருப்புவாசிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் பாடசாலை சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சீனிடைசர் மூலம் எரித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.



