நாளை சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நோன்புப் பெருநாளை ஒட்டி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை ஏப்ரல் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
குறித்த விடயம் கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாளுக்காக திங்கட்கிழமை (31) ஏற்கெனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை 1ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல் நடவடிக்கைகள்
இதற்கான பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examination) தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை 1066 மதிப்பீட்டு மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
