ஆண் பதின்ம மாணவர்களை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய அதிபர் கைது
நான்கு ஆண் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவித்து பபாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுபிட்டிய இறக்குவாணை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணமாகாத 43 வயதுடைய அதிபரே நேற்றையதினம் கைது செய்யப்பட்டவராவார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் 11 தொடக்கம் 13 வயதுக்கிடைப்பட்டவர்களாவர்.
தமது பிள்ளைகளின் நடத்தைகளில் சந்தேகமடைந்த பெற்றோர் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அதபர் அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பெற்றோரின் முறைப்பாட்டுக்கமைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கஹவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிபர் பெல்மதுல்ல நீதிமன்றில் முன்நிறுத்தப்படவுள்ளார்.
இறக்குவாணை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.