பாடசாலை கல்விச் செயற்பாடு - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளதாகவும்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கற்றல் செயற்பாடுகள்

இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறும்.
மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.
உயர்தரப் பரீட்சை

அத்துடன், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை,உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.