பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகள் இந்த பயணக்கட்டுப்பாடு நேரங்களில் எந்த வருமானமும் இல்லாமல் பல மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர் என அனைத்து பாடசாலைகள் போக்குவரத்து சங்கம் கூறுகிறது.
பேருந்துகளுக்கும் எந்த வருவாயும் இல்லாமல் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றுக்கு சரியான பராமரிப்பு இல்லாததால் தொழில்நுட்பக் குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் எல். மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.
வருமானத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5,000 ரூபாய் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
எனவே பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் உரிமையாளர்கள், கடன் தவணைகளையும், நிதி நிறுவனங்களால் செலுத்த வேண்டிய மாதத் தவணைகளையும் திருப்பிச் செலுத்த குறைந்த பட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.