இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்!
Education
School
SriLanka
Dulas Alakaperuma
By Chanakyan
அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22 ஆம் திகதி திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும (Dulas Alakaperuma) தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களான கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்ட இருப்பது பாரிய குற்றமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.