மகாவலி கங்கையில் மூழ்கி உயிரிழந்த பாடசாலை மாணவர்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
மகாவலி கங்கையில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் இன்று (09) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மகாவலி கங்கையில் இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போதே குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
மற்றைய மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி