பாழடைந்த வீட்டில் பாடசாலை மாணவர்கள் செய்த காரியம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து நடத்திய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெலிமடை காவல்துறயினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, பாழடைந்த கட்டடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்தி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு வருவதாகக் குறிப்பிட்டு இந்த வெறிச்சோடிய கட்டடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் வெலிமடை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 5 மணி நேரம் முன்
