அரச பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! மாணவி ஒருவர் பலி
மொனராகலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, வெல்லவாய - சிறிபுர பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆர்.எம். சதிதி நிபுணிகா (14 வயது) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணப் பரிசோதனைகள்
மேலும், குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள பௌத்த அறநெறிப் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வெல்லவாய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[MGKVPI]
விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும் மகளும் அந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் மரணம் தொடர்பான மரணப் பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் குடாஓய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |