ஈழத்தமிழர்களுக்காக தன் விருதை தூக்கியெறிந்த கவிஞர் இன்குலாப்!
ஈழம் சம்பந்தமான பல கவிதைகள், பாடல்கள் படைத்த இந்த கவிஞருடைய எழுத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் மிகவும் நேசித்ததுடன் போர்நிறுத்த காலத்தில் அவர் சந்திக்க விரும்பிய நபர்களில் இன்குலாப் அவர்களும் ஒருவராவார்.
ஈழ தமிழர்களுக்கு எப்போதெல்லாம் வலிக்கிறதோ, அப்போதெல்லாம் குருதி சிந்தும் கவிதைகளால வந்து உயிரை கரைத்த ஒரு கவிஞன் என குறிப்பிடப்படுகின்றார்.
சாதி, மத, இன, மொழி, வர்க்கம் என்ற எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுத்த இவர் இந்தியாவில் நடத்த ஒரு மிக கொடூரமான சம்பவமாக கீழ் வெண்மணி படுகொலைக்கு பின்னராக வந்த அவருடைய கவிதைகளில் சுதந்திரப் புரட்சியைப் பற்றி பேசியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தனது பத்மஸ்ரீ விருதை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசிடம் திருப்பிக்கொடுத்ததைப் போன்று கவிஞர் இன்குலாப் அவர்களும் ஒரு விடயத்தைச் செய்திருக்கின்றார்.
2006 ஆம் ஆண்டு இன்குலாப் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை பின்வரும் காரணங்களுக்காக திருப்பி அனுப்புவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயர் தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருந்திருக்குமேயானால் இவற்றால் துணுக்குற்ற தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.
ஆனால் தமிழின அழிப்பை முன்னின்று நடத்தும் சிங்கள பேரினவாத அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவி செய்து கொண்டிருக்கிறது.
வன்முறையில் நம்பிக்கையற்றதாக பேரிட்டிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயர்த்தியாக அகிம்சை போராட்டத்தை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அகிம்சை போராட்டங்களை பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரஸ் உடையது என சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திலீபன் யாழ் மண்ணில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது ஈழத்தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் தமிழ் பெண்களை மிக பொல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இந்த காங்கிரஸ் ஆட்சிதான் என சுட்டிக்காட்டினார்.
கவிஞரின் இந்தப் போராட்டத்தின் பயனாக அதாவது இந்திய அரசை தமிழகத்தில் நிகழ்ந்த உயிர் தியாகங்களை பொருட்படுத்தாத போது ராஜபக்ச அளவிலான சிங்கள பாசிச அரசு உண்ணாநோன்பு போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த போராட்டத்தின் பயனாக முன்பு கலைஞர் முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் ராஜதந்திர ரீதியான உறவை துண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து இந்திய அரசு இதை நிறைவேற்றுமா என்ற கேள்விகளை கேட்டு எனக்கு இந்த விருது வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்.
இவர் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். முள்ளிவாய்க்கால் நிலம் எப்படிப்பட்டது அப்படி என்பதை கவிதைகளாக அவர் எழுதி வடித்திருந்தார்.
அத்துடன் இந்த களத்தில் கேட்கும் கானங்கள் அப்படி என்பது 1990 களினுடைய முற்பகுதியில வெளிவந்த பாடல். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் மையம் கொண்டிருக்கின்ற பொழுது நடந்த பல சம்பவங்கள் சம்பந்தமாக இந்தப் பாடல் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 23 மணி நேரம் முன்