பாடசாலைகள் ஆரம்பம் - வெளியானது சுற்றுநிருபம்
எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
தரம் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் ஆண்டு ஆகிய மாணவர்களுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Professor Kapila Perera)வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அனைத்து கல்வி நிர்வாகப் பிரிவினரும் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள நிர்வாக துறையினர் சேவைக்கு சமுகமளிப்பது கட்டாயம் இல்லை என்பதுடன் வேறு நோய்த்தாக்கத்திற்குள்ளானவர்கள் அவசியமான நேரத்தில் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் பொருத்தமான உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this