சிலாபத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு : மூடப்பட்ட பாடசாலைகள்
புத்தளம் (Puttalam) - சிலாபம் நகரில் மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக, சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சிலாபம் நகரில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளப்பெருக்கிற்கான காரணம்
இந்தநிலையில் சிலாபம் நகரில் வடிகால் அமைப்பு அடைபட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிக்கு முன்னால் உள்ள பௌத்தலோக வீதிக்குக் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொரளை மயானத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
