இந்திய மக்களவை தேர்தலில் சீமானின் வளர்ச்சி : கவிஞர் வைரமுத்து வாழ்த்து
இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,
மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன்.
கவனம் பெறும் சீமானின் வளர்ச்சி
ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது.
மக்களவைத் தேர்தலில்
— வைரமுத்து (@Vairamuthu) June 10, 2024
8.19 விழுக்காடு
வாக்குகள் பெற்றுத்
தேர்தல் ஆணையத்தின்
அங்கீகாரம் பெற்ற
நாம் தமிழர் கட்சியையும்
அதன் தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சீமானையும் பாராட்டுகிறேன்
ஆலின் விதையொன்று
தனித்து நின்று
ஓசையின்றித் துளிர்விடுவதும்
இலைவிடுவதும்போல
சீமானின் வளர்ச்சி
கவனம் பெறுகிறது…
இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது. ஆனால் இனி - கழிப்பது இயலாது. வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)