மீன்களின் விலை தொடர்பில் கடற்தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மண்ணெண்ணெயின் விலையும் அதிகரித்திருந்தது, இதன்விளைவாக மீன்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்திருந்தது.
இருப்பினும் தற்போது மண்ணெண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இம் மாதம் முதலாம் திகதியில் இருந்து வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணெயின் விலை 50 ரூபாவினாலும், தொழில்துறைக்கான மண்ணெண்ணெயின் விலை 134 ரூபாவினாலும் குறைப்பட்டது.
நுகர்வோர்கள் கவலை
இருப்பினும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்திருத்தத்துக்கு அமைய, மீன்களின் விலையை குறைக்க முடியாது என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது சந்தையில் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.