சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - இரண்டாவது பாரிய நகரமும் முற்றாக முடக்கப்பட்டது
மூன்று அறிகுறியற்ற கொவிட் தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சீனா இரண்டாவது நகரத்தையும் முற்றிலுமாக முடக்கியுள்ளது.
யூசோ(Yuzhou) என்ற 1.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகரமே இவ்வாறு முற்றிமாக முடக்கப்பட்டுள்ளது. நகரத்துக்கான அதன் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மற்றும் அத்தியாவசிய உணவுக் கடைகள் தவிர அனைத்தும் ஒரே இரவில் மூடப்பட்டன.
கொவிட் தொற்றை அடுத்து Xi'an நகரம் முடக்கப்பட்டதைப்போன்ற நிலையை இந்த நகரத்தையும் அரசாங்கம் முடக்கியுள்ளது. அங்கு டிசம்பர் 23 முதல் 13 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பீஜிங்கில் நடைபெறவுள்ள சந்திர புத்தாண்டு மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுகள் தொடங்குவதற்கு சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin), செய்தியாளர்களிடம் சீனா "திறமையான மற்றும் மிகவும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது" என்று உறுதியளித்தார்.
இந்த அமைப்பின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செவ்வாயன்று ஒரு குமிழிக்குள் நுழையத் தொடங்கினர், இது பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வெளி உலகத்துடன் அவர்களுக்கு உடல் ரீதியான தொடர்பு இல்லை.
பங்கேற்பாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள், சீனாவிற்கு வந்தவுடன் போட்டிகள் தொடங்கும்வரை குமிழிக்குள்( bubble ) நுழைவார்கள், அவர்கள் தங்கியிருக்கும் காலம் வரை அங்கேயே இருப்பார்கள்.