புலமைப்பரிசில் பரீட்சை பாடசாலை அனுமதி :கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
By Sumithiran
கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு தரம் 6 க்கு இரண்டாம் சுற்று அனுமதிக்கான மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் சுற்றுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இன்று (03) முதல் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடு
கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அதிகபட்சம் 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும், மேலும் http://g6application.moe.gov.lk/#/ என்ற வழி மூலம் நேரடியாக மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
