மகிந்தவின் மகன் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று வெளியிட்ட தகவல்!
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa ) புதல்வரான ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) திடீரென கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருவதற்கான காரணம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டுபாயில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில கலந்து கொள்வதற்காக சிறிலங்க கிரிக்கெட் அணியுடன் செல்லவுள்ளார்.
புனித தோமஸ், புனித ஜோசப் மற்றும் ரோயல் கல்லூரிகளுக்கு இடையே டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது வருடாந்தம் அல்லது இருவருடங்களுக்கு ஒரு முறை நடக்கின்ற போட்டியாகும்.
கிரிக்கெட் போட்டியான எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளது.
இதில் மேற்படி பாடசாலைகளின் பழைய மாணவர்களே பங்கேற்கவுள்ளனர் என சிங்கள ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.