உடையும் தமிழரசுக்கட்சி...! புதிய கட்சியை உருவாக்க திரைமறைவில் திட்டம் - அம்பலமாகும் டீல்

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran S. Sritharan Shanakiyan Rasamanickam
By Thulsi Mar 12, 2025 02:08 AM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சியை (ITAK) விட்டு புதிய தமிழரசுக்கட்சியை உருவாக்க தாயகத்திலுள்ள - புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது  

இதனிடையே தமிழரசுக் கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதற்கு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத் தளத்தில் வெளியாகும் தொடர் கட்டுரையிலேயே இந்த தகவல்கள் வெளியாகி இருப்பதாக யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய முக்கிய உறுப்பினர் : வலுக்கும் உட்கட்சி மோதல்

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய முக்கிய உறுப்பினர் : வலுக்கும் உட்கட்சி மோதல்

கட்சி தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை 

அந்தக் கட்டுரையில், “தமிழ் அரசின் சமகால தலைமைகளால் அந்தக் கட்சி தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பும் நிலையிலேயே புதிய தமிழ் அரசு ஒன்றை உருவாக்குவது குறித்து இலங்கை, இந்திய, புலம் பெயர்ந்த நாடுகளின் தீவிர தமிழ்த்தேசிய பக்தர்கள் இரவுபகலாக ஆலோசித்து வருகின்றனர் என்று தெரிய வருகிறது.

உடையும் தமிழரசுக்கட்சி...! புதிய கட்சியை உருவாக்க திரைமறைவில் திட்டம் - அம்பலமாகும் டீல் | Secret Plan To Create A New Tamil Government Party

“மருத்துவர் சத்தியலிங்கத்தின் தேசியப்பட்டியல் நியமனம், சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் துரோகி என்று சுட்டுக்கொல்லப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் வலதுகரமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்ட சீ. வீ. கே. சிவஞானம் (C.V.K. Sivagnanam), தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை பதில் செயலாளர் சத்தியலிங்கத்துக்கு சுகவீனம் என்று கூறி பதில் செயலாளர் பதவியை சுமந்திரன் சுருட்டி இருப்பது போன்ற காரணங்களால் இனியும் தமிழ் அரசை திருத்த முடியாது என்ற நிலைக்கு தமிழ்த் தேசிய தீவிரசக்திகள் வந்துள்ளன.

இவையே புதிய தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கக் காரணம். “தமிழ் அரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கில் நால்வரும் வடக்கில் இருவரும் ‘புதிய தமிழ் அரசு’ அமைவதில் உடன்பாடு டையவர்களாக இருக்கின்றனர் என்று தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த் தேசியவாதியின் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

தமிழரசுக் கட்சியில் இணைந்த ரெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்

தமிழரசுக் கட்சியில் இணைந்த ரெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்

திரைமறைவு முயற்சிகள்

சுமந்திரன் அணியைச் சேர்ந்த சாணக்கியன், சத்தியலிங்கத்தை தள்ளி வைத்து இந்தத் திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன.

உடையும் தமிழரசுக்கட்சி...! புதிய கட்சியை உருவாக்க திரைமறைவில் திட்டம் - அம்பலமாகும் டீல் | Secret Plan To Create A New Tamil Government Party

கிழக்கின் தெற்கு எல்லையைச் சேர்ந்த 'பி2பி" செயற்பாட்டாளரும் தமிழ் அரசுக் கட்சி தந்தையின் பேரனும் இந்தத் திரைமறைவு முயற்சிகளில் முக்கியமானவர்.

இவ்வாறு புதிய தமிழ் அரசுக்கு பின்னால் மூத்த புலிகளும் தாயக, தமிழக, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்த தமிழ்த் தேசியவாதிகளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

தமிழ் அரசு தந்தையின் பெயரை கட்சிப் பெயரில் சேர்த்துக் கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூக்கறுக்கப்பட்ட ரணில் : வெட்டிக் கொல்லப்பட்ட தமிழர்கள் - சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

மூக்கறுக்கப்பட்ட ரணில் : வெட்டிக் கொல்லப்பட்ட தமிழர்கள் - சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025