மூக்கறுக்கப்பட்ட ரணில் : வெட்டிக் கொல்லப்பட்ட தமிழர்கள் - சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
அல்ஜசிரா நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மூக்கறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சில இனவாதிகளினால் அன்று எங்களது இனம் வெட்டி கொலை செய்யப்பட்டது.
அத்தோடு, காணாமலாக்கப்ட்ட எங்கள் உறவுகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை, அதற்காக இந்த சிங்கள சமூகம் எவ்வித நடவடிக்கையையும் தற்போது வரை மேற்கொள்ளவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் இனப்படுகொலைக்கான நீதி, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், தமிழ் மக்கள் தொடர்பில் தற்போதைய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழர் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்