தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அமைச்சின் செயலாளர்கள்
Election Commission of Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
சிறிலங்காவின் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு (Election Commission of Sri lanka) அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெறவுள்ள கலந்துரையாடல்
இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க (R.M.A.L.. Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் சட்டம் தொடர்பில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின் தலைவர்களை கொழும்புக்கு (Colombo) வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்