இந்திய வெளிவிகார அமைச்சின் செயலர் திருகோணமலைக்கு விஜயம்
india
visit
trincomalee
secretary
By Vanan
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதிகளை இன்று (03) பார்வையிட்டார்.
இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower Tank Farms) தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் இலங்கையின் சக்தி துறைப்பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய – இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் LIOC அதிகாரிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
LIOC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'Servo Pride ALT 15W-40'ஐ இந்த விஜயத்தின்போது அறிமுகம் செய்துவைப்பதற்காக LIOC நிறுவனத்துடன் இணைந்துகொண்டமை குறித்து வெளியுறவு செயலர் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.