நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழல் - சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த தரப்பு

Power Cut Today Minister of Energy and Power Mega Power NPP Government
By Thulsi Apr 11, 2026 08:03 AM GMT
Report

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சி.ஐ.டியில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமார ஜயக்கொடிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க தமிழரசு முடிவு

குமார ஜயக்கொடிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க தமிழரசு முடிவு

மின்சாரக் கட்டண உயர்வு

நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி விவகாரம் பேசும்பொருளாக மாறியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், நிலக்கரி இறக்குமதியில் இலங்கை மின்சார சபைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நஷ்டங்களே நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணிகளில் ஒன்று என இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.

நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழல் - சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த தரப்பு | Secretary To President Cid Probe Into Coal Imports

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி ஏற்றுமதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் இலங்கை மின்சார சபையின் இலாபங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கட்டண உயர்வைப் பரிந்துரைப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற நஷ்டங்களைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்திற்கு நட்டம்    

புத்தளம் - நுரைச்சோலையில் உள்ள லக்விஜய (Norochcholai Lakvijaya) நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான மற்றும் தரமான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்யும் தனது முதன்மைக் கடமையை எரிசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தன.

நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழல் - சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த தரப்பு | Secretary To President Cid Probe Into Coal Imports

நாட்டின் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய பெரும் அலட்சியம், அமைச்சரின் பொறுப்பின் அடிப்படை மீறலாகும் என்றும் எதிர்க்கட்சிகள்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வந்த போதிலும், தணிக்கையாளர் நாயகத்தின் அறிக்கை வெளியானதன் பின்னர் அரசாங்கத் தரப்பினர் பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போயுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் போது ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்துக்கு வந்து அரசாங்கத்தை தூய்மைப்படுத்துகிறார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை காட்டிலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்! பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்! பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி