அழுத்தத்தில் தவெக - விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சி.ஆர்.பி .எப். அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 11 பேர், 24 மணி நேரமும் விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செருப்பு வீசப்பட்டதாக காணொளி
இந்த நிலையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர்.
விஜய் மீதும் செருப்பு வீசப்பட்டதாக காணொளி வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன.
அதுமட்டுமின்றி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மீறி, சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன் மனநலம் பாதித்த அருண், 24 என்பவர் புகுந்தார். இது விஜய் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதை அம்பலப்படுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சகம்
தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
