அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் கைது
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
பாலமீன்மடு கடற்பகுதியில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த சுமார் 100 பேர் நாடுகடத்தப்பட்டுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு முற்பட்ட 400 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 23 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி