தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள சீமான் : பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விபரிப்பு
சீமான் பொய் சொன்னால் அதனை விமர்சிப்பது பெரிய விடயம். ஆனால் நாகரீகமற்ற வகையில் அவரை விமர்சிப்பது என்பது பொருத்தமான செயற்பாடாக தெரியவில்லை.
2009 ற்கு பிறகு சீமானின் பெயர் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. எனவே அவர் தவிர்க்க முடியாத சக்தியாகவே இருக்கிறார்.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்திற்கு பிறகு இராமேஸ்வர கூட்டத்தில் அவர் பேசிய பேச்சின்மூலம் அவர் மையப்புள்ளியாக இருக்கிறார் என்பது தெளிவாகின்றது.
இவ்வாறு ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.
அண்மைக்காலமாக பெரியார் தொடர்பில் சீமான் தெரிவித்து வரும் கருத்துக்கள் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் அதன் உண்மைத்தன்மை என்ன, அவர் தெரிவிக்கும் விடயங்கள் சரிதானா என விரிவாக தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.
அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்...