அரசியல் கூட்டத்தில் நபரொருவரை கன்னத்தில் அரைந்த சீமான்: வெடித்த சர்ச்சை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் கூட்டமொன்றில் நபரொருவரை கன்னத்தில் அறைந்த காணொளியொன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் யுனெஸ்கோ, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை என குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் மற்றும் தமிழார்வலர்களும் அது தமிழ் மன்னரின் கோட்டை என்று அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சொந்தமான கோட்டை
இதன்தொடர்ச்சியாக “செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோணுக்கு சொந்தமான கோட்டை” என்ற அடிப்படையில் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று (17) கூட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றுள்ளனர்.
கட்சி நிர்வாகிகள்
இந்தநிலையில், கட்சி நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு பேச வந்த சீமானிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் மேடையின் அருகில் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மெய்பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில் அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய மெய்பாதுகாவலர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மெய்பாதுகாவலர்களுடன் செய்தியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்போது மேடையில் இருந்து அந்த வாக்குவாதத்தைப் பார்த்த சீமான், கீழே இறங்கி செய்தியாளர்களை அடிப்பதற்குப் பாய்ந்துள்ளார்.
பாரிய சர்ச்சை
இதன்போது அங்கே நின்றிருந்த நபர் ஒருவரையும் சீமான், கன்னத்தில் பளார் என்று அறைந்ததையும் வெளியாகிய காணொளிகளில் காணக்கூடியதாக இருந்தது.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் செய்தியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
இந்தநிலையில், இது குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பி உள்ளதுடன் ஒரு அரசயில் தலைவர் இவ்வாறா நடந்துகொள்வது என்ற அடிப்படையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
