இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட பெருமளவு தங்கம் பறிமுதல்
Sri Lanka
Gold smuggling
India
Gold
By Shadhu Shanker
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரைப் பகுதியில் நேற்று (30) இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடல் வழியாக கடத்தல்
இதன் போது, இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மோட்டார் சைக்கிளில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
