குடிநீர் போத்தலின் விலை குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை ஆதங்கம்
நாட்டில் சில பகுதிகளில் குடிநீர் போத்தல்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மீனகயா மற்றும் சில தொடருந்துகள் , தொடருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை குறித்து சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்ட நடவடிக்கை
இது போன்ற செயல்களால் பாதிக்கப்படும் நுகர்வோர், உடனடியாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறியத்தருமாறும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |