இலங்கையில் பிறந்த குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்கும் கும்பல் : ஆரம்பமானது விசாரணை
இலங்கையில் பிறந்த குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நோர்வே சிறுமி முறையீடு
இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நோர்வே சிறுமி கே. பிரியங்கிகா சாமந்தி முன்வைத்துள்ளார்.
நீதிமன்றின் உத்தரவு
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |