விடுதலைப் புலிகள் இல்லையென்றால் யாருடன் பேசப்போகின்றீர்கள்?? சபையில் எழுந்த பலத்த சந்தேகம் (காணொளி)
விடுதலைப்பு புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. எனவே, யாருடன் போரிடப்போகின்றீர்கள். பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மேலும் உயரும் என எதிர்வுகூறப்படுகின்றது.
இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை. இந்நிலையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு வறுமையில் சிக்கித்தவிக்கையில் எதற்கு இராணுவத்துக்கு அதிக நிதி? இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விடுதலைப்பு புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. எனவே, யாருடன் போரிடப்போகின்றீர்கள். பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா என்ற கேள்வியும் எழுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.