சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவி விலக தயாராகும் செல்வம் அடைக்கலநாதன்!
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ரெலோ தலைமை பதவியிலிருந்து விலக எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலஅவகாசம் கோரியுள்ளார்.
வவுனியாவில் நேற்று (09.11.2025) நடைபெற்ற தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்திய நிலையில், ஜனவரி மாதம் பதவி விலகுவதாக அடைக்கலநாதன் அவகாசம் கோரியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரலில் கட்சியின் தேசிய மாநாட்டில் தான் போட்டியிடவில்லை எனவும் அதில் விரும்பிய ஒருவரை தலைவராக தெரிவு செய்யுமாறும் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது தெரிவித்தார்.
குறித்த தலைமைக் குழு கூட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமை தாங்க முயன்ற போது, உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட, கூட்டத்தை தலைமை தாங்குவதிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலகிக் கொண்டார்.
உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. எனினும், உறுப்பினர்கள் அவரை உடனடியாக பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |