தமிழர்களை வேட்டையாடி மகிழ்ந்த கூட்டம்? அச்சத்தின் உச்சத்தில் ராஜபக்சர்கள்
speech
parliament
selvarasa gajanthiran
By Vanan
கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியதாகவும், அந்தக் கொடூர சம்பவங்களை அப்போதைய ஆளும் - எதிர்க்கட்சிகள் மகிழ்வுடன் கண்டுகழித்ததாகவும் நாடாளுமன்றில் நினைவூட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.
ஆனால் தற்போது உங்களது மக்களுக்கு அச்சப்பட்டு, உங்களது மக்களுக்காக - எதிர்காலத்தில் உங்களுடைய மக்களிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்த அவசலகாலச் சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள் எனவும், இந்தப் போக்கு உங்களை அதள பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும் அவர் எச்சரித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார், அவர் ஆற்றிய உரை காணொளி வடிவில்,