செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசியல்வாதிகளை மட்டும் நம்பி பயனில்லை
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று, அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தமிழர் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாகும்.
ஆனால், இந்த விவகாரத்தை மையப்படுத்தி அரசியல் இலாபம் தேடும் ஒரு தரப்பினரும் செம்மணியைச் சுற்றி வலம்வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளுக்கு நீதியைத் தேட வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில், அரசியல் கதிரைகளுக்காக மோதிக்கொள்ளும் தலைமைகளை நம்பி நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது கேள்விக்குறியான விடயமாகவே உள்ளது.
இலங்கையின் இனப்படுகொலை விவகாரத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்ற நவநீதம்பிள்ளைக்கு வாழ்த்துகளை மட்டும் அள்ளி வழங்கும் இந்தத் தலைமைகள், செம்மணி விவகாரத்தில் காலம் தாழ்த்தும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.
அந்த வகையில், செம்மணி விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பங்கு குறித்து ஐ.பி.சி. ஊடகத்திடம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள வழக்கின் சாட்சியாளரும் மனித உரிமை ஆர்வலருமான கிருபாகரன், அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களைத் தீவிரப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் பல்வேறு விடயங்களைத் தொடரும் காணொளியில் அவர் விளக்கியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |