சிறிலங்காவுக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு கோரிக்கை!
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மீட்டெடுக்க இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
India must send in the Indian Army to restore Constitutional sanity. At present anti Indian foreign forces are taking advantage of people’s anger. This affects India’s national security
— Subramanian Swamy (@Swamy39) May 10, 2022
அவர் தனது பதிவில்,
"அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு சக்திகள் மக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.