தவெகவின் செங்கோட்டையன் வெற்றி - 10 ஆவது முறையாக சட்டப்பேரவைக்கு
By Thulsi
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.
செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த நிலையில் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுள்ளார்.
10 ஆவது முறையாகவும், தொடர்ந்து 5 ஆவது முறையாகவும் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்கிறார்.
பெரும்பான்மை தேவை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தவெக - 108, திமுக - 66, அதிமுக - 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.
சமீபத்தில் அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற செங்கோட்டையன் தனது தொகுதியில் முதல்முறையாக தவெக சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி