பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி : ஈழமுரசில் இருந்து இன்றைய ஈழநாடுவரை

Jaffna Journalists In Sri Lanka
By A. Nixon Feb 16, 2025 01:28 PM GMT
Report

அண்ணன் பாரதி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உரக்கப் பேசப்பட்ட காலத்தில் ஊடகத்துறைக்குள் கால்பதித்தவர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் உள் நோக்கங்களை தொடர் கட்டுரையாக எழுதியதன் மூலம் பத்திரிகைத் துறைக்குள் பிரகாசிக்க ஆரம்பித்தார்.

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயோக் குடியேற்றத் திட்டத்தின் நீட்சி 2009 இற்குப் பின்னரான சூழலிலும் அதாவது, இன்றைய அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் தொடரும் என்பதற்குரிய காரண – காரியங்கள் பலமாகத் தென்படுகின்றன.

வடக்கு கிழக்கில் தொடரப் போகும் சிங்களக் குடியேற்றங்கள்

 இது பற்றி பாரதி அண்ணன் அக் கட்டுரையில் அன்றே எச்சரித்திருந்தார். அதாவது, வடக்கு கிழக்கில் தொடரப் போகும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அவருடைய எச்சரிக்கை இன்று வரை எந்தவித மாற்றங்களும் இன்றி தொடருவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் அவர் யாழ்ப்பாணத்தில் இயற்கை மரணமடைந்துள்ளார்.

பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி : ஈழமுரசில் இருந்து இன்றைய ஈழநாடுவரை | Senior Journalism Editor Bharathi

1984 இல் யாழ் ஈழமுரசுப் பத்திரிகையில் தனது பத்திரிகைத்துறைப் பணியை ஆரம்பித்த பாரதி, பின்னர் முரசொலி பத்திரிகையில் பணியாற்றினார். அமைதிப் படை என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கொடுமைகள் பற்றி பாரதி அன்று செய்தியாகவும் செய்தி விமர்சனமாகவும் எழுதியிருந்தார்.

ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றை தொடராக எழுதிய பாரதி, ஜனநாயக வழியில் சாத்தியப்படக் கூடியதை, இலங்கை ஒற்றை ஆட்சி அரசு இராணுவ கண்ணோட்டத்தில் பார்ப்பதன் ஆபத்துக்களையும் விமர்சித்திருந்தார்.

அக் காலகட்டத்தில் அதாவது, 1989 இல் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் இந்திய இராணுவத்தின் துணையுடன் இயங்கிய ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அத் துயரங்களையும் அக்கால அரசியல் அவலங்களையும் செய்தியாக எழுதிக் கொண்டிருந்த பாரதி, யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்தபோது வீரகேசரி தேசிய நாளிதழில் தனது பத்திரிகைப் பணியை தொடர்ந்தார்.

இந்திய இராணுவத்தின் காலத்தில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுக்களின் படுகொலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்து செயற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளுடன் தொடர்புகொண்டு அரசியல் ரீதியான தெளிவுபடுத்தல்களை பாரதி அண்ணன் அன்று மேற்கொண்டிருந்தார்.

பொறுப்புள்ள தமிழ்ப் பத்திரிகையாளனின் பணி 

துணிகரமான இச் செயற்பாடுகள் பற்றி பாரதி தான் மரணிக்கும்வரை எந்தவொரு இடத்திலும் மார் தட்டித் தனக்குப் பெருமை சேர்க்கவில்லை. ஏனெனில், அது பொறுப்புள்ள தமிழ்ப் பத்திரிகையாளனின் பணி என்றுதான் அவர் சொல்வார்.

பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி : ஈழமுரசில் இருந்து இன்றைய ஈழநாடுவரை | Senior Journalism Editor Bharathi

கொழும்பில் வீரகேசரியில் பணியாற்றியபோது அதன் தொடர்ச்சியை அவரால் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஆனாலும், இந்திய அரசின் நோக்கங்கள் அதற்குத் துணைபோன தமிழ்த் தேசியக் கட்சிகளின் போக்குகள் பற்றி அவர் தனது அரசியல் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது சாடியிருக்கிறார், சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 1997 இல் தினக்குரல் பத்திரிகை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டபோது மூத்த பத்திரிகையாளர் அமரர் இராஜகோபால் மற்றும் வீ.தனபாலசிங்கம் ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தினக்குரல் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவரானார்.

1998 இல் கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக உறுப்பினராக இருந்த பாரதி, இலங்கையில் ஜனநாயகமும் பன்மைத் தன்மையும் கொண்ட ஊடகக் கலாசாரத்திற்கான மற்றும் பத்திரிகைத் துறை பற்றிய தொழில் உரிமைகளுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டார்.

2005 கையொப்பமிட்ட பின்னர் கருத்துரைத்த பாரதி, ஈழத்தமிழ் அச்சு ஊடகங்கள் 1981 இல் அதாவது, யாழ் ஈழநாடு எரிக்கப்பட்டபோது கொழும்பில் இருந்த சிங்கள பத்திரிகையாளர்கள் பலர் அமைதியாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

 இலங்கைத்தீவில் அப்போது பத்திரிகைத் தொழிற் சங்கங்கள் பெரியளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறியிருந்தார். தனது ஓய்வு காலத்துக்கு முன்னரே தினக்குரல் பத்திரிகையில் இருந்து விலகி யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு நாளிதழில் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சென்ற பாரதி 1980களை நினைவுகூர்ந்தார்.

அதாவது, யாழ். ஈழமுரசில் பத்திரிகைப் பணியை ஆரம்பித்து பின்னர் யாழ் முரசொலியில் பணியாற்றிப் பின்னர் கொழும்பில் 35 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் யாழ் மண்ணில் அதாவது, 1981 இல் இராணுவப் பின்னணியுடன் எரியூட்டப்பட்ட ஈழநாடு பத்திரிகையில் அதுவும் போர் இல்லாதொழிக்கப்பட்ட 2009 இற்குப் பின்னரான சூழலில் பணியாற்றியமை அவருடைய தேசப் பற்றை எடுத்தியம்புகிறது.

அன்றைய ஈழநாட்டின் தரத்துக்கு இன்றைய ஈழநாடு அமைய வேண்டும் என அதன் உரிமையாளர் மூத்த பத்திரிகையாளர் குகநாதன் வலியுறுத்தியதாக பாரதி சொல்வார்.

அவர் நினைத்திருந்தால், ஈழநாடு ஆசிரியர் பதவியை ஏற்காமல் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்திருக்கலாம். ஆனால் அவர் அந்த வாழ்க்கையை விரும்பியிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் நிமலராஜன் படுகொலை

2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் நிமலராஜன் கொல்லப்பட்டபோது அதனைக் கண்டித்து கொழும்பில் தமிழ் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்குரிய அத்தனை ஏற்பாட்டையும் தனித்து நின்று செய்தவர்.

பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி : ஈழமுரசில் இருந்து இன்றைய ஈழநாடுவரை | Senior Journalism Editor Bharathi

இதனை அறிந்து தொடர்பு கொண்ட மூத்த சிங்களப் பத்திரிகையாளர் சுனந்ததேசப்பிரிய என்னையும் பாரதியையும் அழைத்து பேசினார்.

சிங்கள இனவாதத்துக்குள் மூழ்கியிருந்த சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளராக அப்போது பொறுப்பேற்றிருந்த சுனந்ததேசப் பிரிய, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புகளை ஒருங்கிணைத்து அந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் நடத்தினார். அன்றில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அத்தனை செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார்.

2002 இல் சமாதான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டபோது தென்னாபிரிக்க சமாதான முயற்சிக்குரிய ஏற்பாடுகள் மற்றும் அரசியல் தீர்வுகளைப் பற்றி விரிவாக எழுதிய பாரதி அந்த விடயங்களை தினக்குரல் ஆசிரியர் தலையங்கங்களிலும் அவ்வப்போது எழுதியிருந்தார்.

நோர்வே சமாதானப் பேச்சுக்களில்  உடன்பாடு இருக்கவில்லை

அண்ணன் பாரதிக்கு நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களில் எந்தவொரு உடன்பாடுகளும் இருக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி : ஈழமுரசில் இருந்து இன்றைய ஈழநாடுவரை | Senior Journalism Editor Bharathi

பாரதி, தன்னை ஒருபோதும் வெளிப்படையாகப் புகழ்ந்து பேசியதில்லை. பல அரசியல் கருத்துக்களுக்கு அவர் சொந்தக்காரர். ஆனால், அவர் எந்தவொரு இடத்திலும் அதனை வெளிப்படுத்தவேயில்லை. இலைமறை காய் தான் இந்த பாரதி அண்ணன்.

பாரதி பற்றி இன்னும் தெரியாத பல விடயங்கள் உண்டு. விரைவில் விரிவான கட்டுரை வெளிவரும்.

அ.நிக்ஸன்

பத்திரிகையாளர்

கொழும்பு -06



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022