ரஞ்சன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
letter
Ranjan Ramanayake
pandora
By Vanan
முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயங்களும், ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) தெரிவித்துள்ளார்.
மறைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து பண்டோரா ஆவணத்தின் ஊடாக அம்பலமாகியவர்களின் பட்டியலில் சிக்கியுள்ள இவர்களது ரகசியங்கள் தன்னிடம் இருப்பதை கடிதம் ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு விசேட கடிதமொன்றை தனது சட்டத்தரணி ஊடாக, நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளார்.