மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை! கிழக்கு ஆளுநரிடம் கையளிப்பு
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டும் அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் இன்று சனிக்கிழமை (30) புதுடில்லியில் ஞாபகாரத்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் கே.அண்ணாமலையின் ஏற்பாட்டிலும் மலையக மக்களை கௌரவிக்கும் வகையில் இந்திய தபால்துறை அமைச்சினூடாக இந்த நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள்
இந்நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடாவால் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் நினைவுத் தபால்தலை கையளிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு இந்திய தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Our Hon PM Thiru @narendramodi avl has always considered Sri Lanka our Civilisational twin & the release of the Commemorative Stamp on 200 years of Indian-origin Tamils in Sri Lanka today has strengthened this.
— K.Annamalai (@annamalai_k) December 30, 2023
At @BJP4India headquarters today, our National President Thiru… pic.twitter.com/981IKmJINL
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |