செந்தில் தொண்டமான் மற்றும் சாணக்கியனுக்கு சென்னையில் அமோக வரவேற்பு
இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா நடைபெறுகின்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் (11) நாளையும் (12), நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.
அமோக வரவேற்பு
இந்த நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், லண்டன், கனடா, மொரிசியஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்நேரடியாகச் சென்று வரவேற்றுள்ளார்.
இந்நிலையில், “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |