மட்டக்களப்பின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்
Batticaloa
Senthil Thondaman
By pavan
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று(27) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ,நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் அரசாங்க அதிபர்கள் , அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய வளர்ச்சித் திட்டங்கள்
இதன் போது மட்டகளப்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தின் தற்போதைய சுய நிலைத்தன்மையை மேம்படுத்த புதிய வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்