தமிழர் தாயகத்தில் நடைபெற்ற மாபெரும் பொங்கல் திருவிழா
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் திருவிழாவானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவானது இன்று (08)திருகோணமலையில் நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (6) இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியையும் மற்றும் படகோட்ட போட்டி, சிலம்பம், கபடி போட்டிகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்தார்.
மாபெரும் பொங்கல் திருவிழா
அதன்மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்துள்ளனர்.
எனினும் குறித்த பொங்கல் விழா தொடர்பில் கிழக்கில் உள்ள சமய அமைப்புகள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பண்பாட்டு படுகொலை
அதாவது தைப்பொங்கல் விழா என்பது தமிழ் மாதமான தை பிறந்த பின்னரே நடத்தப்படும் ஒன்று.ஆனால் இவ்விழாவானது ஜனவரி 07 ( மார்கழி 22) இல் நடத்தவிருப்பது தமிழர் பண்பாட்டிற்கு முரணானது எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கல் விழாவானது ஒரு பண்பாட்டு படுகொலையாகவே கருத வேண்டுமென திருகோணமலை முத்தமிழ் சங்க தலைவர் மாயன் சிறிஞானேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |