ஆயுத கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி..! சர்வதேச அரங்கின் கவனத்தை ஈர்த்த செந்தில் தொண்டமான்
சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் செந்தில் தொண்டமானின் உரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பீஜிங்கில் நடைபெற்ற நவீன பட்டுப்பாதை திட்டத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் உரையாற்றினார்.
அவரது உரையில் அவர் தெரிவித்ததாவது, இவ்வுலகமானது அனைவரும் வாழ சிறந்த இடமாகும். மனிதர்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமையால் இன்று மனிதர்கள் வாழ முடியாத இடமாக இவ்வுலகம் மாறிக்கொண்டிருக்கின்றது.
ஆயுத கலாசாரம் முதலில் முற்றுப்புள்ளி
நட்பு நாடுகளாக இருக்க வேண்டிய நாடுகள் இன்று பகைவர்களாக மாறியுள்ளனர். இம்மாநாட்டில் இருக்கும் 130 நாடுகளும் ஒன்றிணைந்து ஆயுத கலாசாரம் முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கும் வரை இவ்வாயுத மோதல் குறித்து மௌனம் காத்த பல தலைவர்கள் அவரின் உரைக்கு பிறகு அவருடைய கருத்தை மேற்கோள்காட்டி உரையாற்றியுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில செனட் தலைவர் ராபர்ட் மைல்ஸ் ஹெர்ட்ஸ்பெர்க் செந்தில் தொண்டமானின் பொதுநலமிக்க விவேகமான உரைக்கு நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.